பொதுமக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்.53 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜி.ஆர்.எஸ்.கற்பகவல்லி.
அனைக்கட்டி மைதானம், வில்லியம்ஸ் ரோடு,வார்னர்ஸ்ரோடு, நீயூராஜா காலணி உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 53-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜி.ஆர்.கற்பகவல்லி இன்று வில்லியம்ஸ் ரோடு பகுதியில் வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கூறியபோது திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் நான் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொது மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வேன் என உறுதி அளித்தார்.
இவருடன் அப்பகுதி வட்டச் செயலாளர் ஒத்தக்கடை மகேந்திரன்,ஜி.ஆர்.சிவகுமார்.அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.