திருச்சி மாநகராட்சி 24வது வார்டில் போட்டியிடும் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்சோபியா விமலா ராணி வீடு வீடாகச் சென்று என்று பிரச்சாரம் செய்தார் அப்போதுவளர்ச்சித் திட்டங்கள் தொடர என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.
திருச்சி மாநகராட்சி 24வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் மனைவி சோபியா விமலா ராணி போட்டியிடுகிறார்.
இவர் வார்டு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார். அப்போது தெற்கு முத்துராஜா சீனிவாச தெரு உட்பட பல்வேறு தெருக்களில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழி நெடுகிலும் நின்று ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
வேட்பாளர் சோபியா விமலா ராணி பேசும்போது,
தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சராக கே.என்.நேரு இருக்கின்றார்.
பாராளுமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி. இருக்கிறார். ஆகையினால் உங்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். எனது வெற்றி மக்களின் வெற்றியாக இருக்கும்.
இந்த வார்டில் மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, உடனுக்குடன் தீர்வு காணப்படும் .வளர்ச்சித் திட்டங்கள் தொடர என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். நான் மக்களில் ஒருவராக இருந்து 24-வது வார்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன். மக்களுக்காக உழைப்பேன் என்றார்.