திருச்சி 16 வது வார்டில் மக்கள் நீதி மய்யத்தின் நிக்சன் சகாயராஜ் போட்டி. வியாபாரிகளுக்காக போராடியவர் இனி மக்களுக்காக…..
திருச்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 16 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நிக்சன் சகாயராஜ் 16 வது வார்டில் போட்டியிடுகிறார்.
இன்று அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கமலக்கண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
உடன் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன்.
நிக்சன் சகாயராஜ் கமலக்கண்ணன் உடன் இணைந்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் போராட்டங்களில் அனைத்திலும் நடந்துகொண்டு வியாபாரிகள் நலனுக்காக போராடியவர்களில் ஒருவராவார்.
இவர் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க துணைத் தலைவராவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.