தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்யாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 73-வது குடியரசு தின விழா ஜங்ஷன் உப்பு சத்யாகிரக நினைவு ஸ்தூபியில் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செல்வவதி பொன்னையா தேசிய பாடல் பாடினார். மாவட்ட தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜ முதலியார், மில்லி சென்ட் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மாநில ஆலோசகர் ராஜசேகரன் வரவேற்றுப் பேசினார்.
கண்டோன்மெண்ட் காவல்துறை உதவி ஆணையர் அஜய் தங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மத்திய அரசு கள விளம்பர அதிகாரி தேவி பத்மநாதன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். நேரு யுவகேந்திரா அதிகாரி சுருதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில பொதுச்செயலாளர் பூக்கடை பி. பன்னீர்செல்வம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ் ராஜாஜி சிலைக்கு மாலை அணிவித்தார். நேரு யுவகேந்திரா முன்னாள் அதிகாரி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர் ஜெஸ்டின் ராஜா நன்றி கூறினார்.