திருச்சி கிராமாலயா தாமோதரனின் 35 ஆண்டு கால சேவைக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தமைக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் பாராட்டுகள்.
கிராமாலயா-வின் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தை நாட்டின் முன்னோடி திட்டமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான தனி நபர் கழிப்பிடங்களை கிராமாலயா கட்டியுள்ளது.
நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் சுகாதார நலக் கல்வி குழுக்களை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார கழிப்பிட வளாகங்களை கட்டணக் கழிப்பிடங்களாக பராமரிக்கவும் பயிற்சி அளித்துள்ளார் .
கிராமாலயாவின் தொடர் விழிப்புணர்வு சேவை காரணமாக நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட நகர்ப்புற குடிசைப் பகுதியாக 2002ல் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கல்மந்தை பகுதியும், நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட கிராமமாக 2003ல் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட தாண்டவம்பட்டியும் அறிவிக்கப்பட்டன.
இந்த இரு நிகழ்வுகளால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள் ஆகியன திறந்தவெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க முன்னுதாரணமாக அமைந்தன.
தற்போது தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியில் பெண்கள் சுகாதாரம் பேணுவதில் நச்சுநிறைந்த நாப்கின் பயன்பாட்டிற்கு மாற்றாக துணியாடை நாப்கின்கள் அறிமுகப்படுத்தி சுமார் 3, லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
கிராமாலயாவின் தொடர் சுகாதார சேவைகளுக்காக 2017ல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “டாய்லெட் டைடன்” என்ற விருதை வழங்கி உள்ளார். இதை தாமோதரனின் 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவும், திருச்சி மண்ணுக்கு கிடைத்த பெருமையாகவும் கருதுகிறோம்
இந்திய அளவில் சர்வதேச கவனத்தை ஈர்த்த தனித்துவமிகு சமூக மாற்ற சேவையாளர் எஸ்..தாமோதரன் அவர்களுக்கு சமூக சேவைக்கான பத்மஸ்ரீ விருது மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தமிழகத்திற்கும் திருச்சிக்கும் பெருமை சேர்த்த
பெருமைமிகு , தண்ணீர் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினரும் , கிராமமாலயா தொண்டு நிறுவனத்தின் இயக்குநருமான எஸ்.தாமோதரன் அவர்களை தண்ணீர் அமைப்பு சார்பில் பயனாடை, மாலை அணிவித்து, துணிப்பைகள் வழங்கி மகிழ்வுடன் வாழ்த்திப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் கலைக் காவிரி உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார், நிர்வாகக்குழு .ஆர்.கே.ராஜா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினார்.