திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் செக்யூரிட்டிகள் அட்டகாசம். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் ராஜ்குமார் கோரிக்கை.
திருச்சி சமூக ஆர்வலர் ஜான் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி அண்ணல் காந்தி நினைவு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.
பிரசவ வலியோடு வரக்கூடிய பெண்ணுக்கு அந்தப் பெண்ணை மூன்று நாட்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் நிலை உள்ளது.
பணம் கொடுக்கிற நபர்களுக்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு அனைத்து டெஸ்ட்களும் எடுத்து, அவர்களுக்கு உரிய அனைத்து பரிகாரமும் செய்து வருகிறார்கள்.
அதேபோல் மரியாதைக்குரிய மகப்பேறு என்ற போர்வையில் சீருடையில் பணியாற்றும் செக்யூரிட்டிகள் பெண்களை உருட்டுவதும், மிரட்டுவதும், உள்ளே புகுந்து அவர்களை ஒருமையில் பேசுவதும், அநாகரிகமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பணம் கொடுத்தால் மட்டுமே அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள பயன்களை பெண்கள் அடைய முடியும் நிலை உள்ளது.
செக்யூரிட்டிகள் செய்யும் இத்தகைய செயலால் தமிழக முதலமைச்சருக்கும், பொது சுகாதாரத் துறை அமைச்சருக்கும், ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில்
இந்த திருச்சி அண்ணல் காந்தி நினைவு மகப்பேறு மருத்துவமனை முற்றிலும் தவறான முறையில் செக்யூரிட்டிகள் நடந்து கொள்கிறார்கள்.
மருத்துவமனை டீன், இருக்கை மருத்துவர் அல்லது மருத்துவ கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் போலீஸ்காரர் ஒருவரது இருசக்கர வாகனம் திருடு போனது. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய செக்யூரிட்டிகள் இதுபோன்ற சம்பவங்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆகையால் காவல்துறையினர். இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மருத்துவத் துறையும் இந்த தனியார் செக்யூரிட்டிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என சமூக ஆர்வலர் முனைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்