திருச்சி பாஜக தலைவர் ராஜசேகரன் போராட்டம் அறிவிப்பு எதிரொலி. பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் மீது குற்றவியல் நடவடிக்கை.
பெருகமணி ஊராட்சி மன்றதலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் போலியாக ரசீது முலம் ரூ.8 லட்சம் வரை மோசடி போன்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிமேகலை மற்றும் திருச்சி பாஜகவினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.கடந்த 11/2 வருடமாக பல்வேறு புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சிவராசு போராட்டம் நடத்த இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்புவிடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன்,
பெருகமணி ஊராட்சி மன்ற துணை தலைவி மணிமேகலை, பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் ஒண்டி முத்து, தண்டபாணி அழேகசன், ஈஸ்வரன்,வக்கீல் சன்மாரியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து அவரது பதவி நீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பாஜகவினர் குடியேறும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்தனர்.
ஒரு வருடம் மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பாஜகவினரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிப்பின் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.