திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி. பரஞ்ஜோதி, அறிவழகன் ஆகியோரின் அறிக்கை.
அஇஅதிமுக மாவட்ட மாணவரணியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல்!.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் T.அறிவழகன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25ஆம் நாள் அன்னை தமிழுக்காக போராடி தங்களின் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் வருகின்ற
நாளை காலை 10.30மணி அளவில் நடைபெற உள்ளது.
அது சமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி மற்றும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் அறிவழகன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.