பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்
மாநில நிர்வாகிகள் கூட்டத்தில்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது.
தஞ்சை தங்கமுத்து, மதுரை சந்திரசேகர், மாநில துணைத் தலைவர் திருச்சி மேகராஜன், கரூர் தட்சணாமூர்த்தி, புதுக்கோட்டை சேகர் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-

நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் .
விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்.
மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு சென்று மார்ச் மாதத்தில் போராட்டம் நடத்துவது என்றும் ,
அதுவரை திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் காவிரியில் சாக்கடை கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆறு, ஏரி, குளங்களில் உள்ள காட்டு கருவை முட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நதிகளை இணைப்பதற்கு தமிழ்நாடு நதிகள் இணைப்பு ஆணையம் அமைத்து தென்காசி மாவட்டத்திலுள்ள கருப்பாநதி நீரை மேலநீலிதநல்லூர் பகுதிக்கு திருப்பி விடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.