எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள் மேலான அறிவிப்பின்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட
ஒன்றிய மற்றும் கிளைக் கழகங்கள், நகர, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகள், பகுதி கழகம் மற்றும் வட்ட கழகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கழக நிறுவனத் தலைவர் பாரதரத்னா, புரட்சித்தலைவர், மக்கள் திலகம், எம்ஜிஆர் அவர்களின் 105 வது பிறந்தநாளான 17.01.2022 அன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மற்றும் அவரது திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து, கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி சிறப்புடன் கொண்டாட வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
ப.குமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழக செயலாளர்,
அ.இ.அண்ணா தி.மு.கழகம்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்.