Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாசு இல்லா போகி கொண்டாட மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் நீலமேகம் வேண்டுகோள்.

0

'- Advertisement -

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாசு இல்லாத போகி பண்டிகை கொண்ட வேண்டும் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறாம்

தைப்பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக “பழையன கழிதலும், புதியன புகுதலுமாக“ கொண்டாடி வருவது வழக்கம்.

இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.

இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், பியூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.

மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகிறது. இதனால் பார்க்கும் திறன் குறைபடுகிறது.

இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களைக் எரித்து மாசு படுத்தினால் அவருக்கு அபாதம் விதித்து , தண்டனை வழங்க வேண்டும் என மாவட்ட, மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம்.

எனவே போகிப்பண்டிகையைபொதுமக்கள் டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களைக் எரிக்காமல், குப்பைகளை முறைப்படி அகற்றி போகி பண்டிகையை மாசு இல்லாமலும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .

மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும்,
தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.