காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா.
காருகுடி அரசுஉயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
“உழவர்களே உலகத்தின் அச்சாணி “என்ற எண்ணத்திற்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பள்ளி முழுவதும் தோரணங்களாலும் வண்ணக் கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டது .
செங்கரும்பும் மஞ்சளும் எங்கும் மணம் வீச பொங்கல் பொங்கி வழிய மகிழ்ச்சி எங்கும் நிறைய இன்றைய விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழாவில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணவு பறிமாறியதோடு ஆசிரியர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். இந்த நிகழ்வு பொங்கல் விழாவை மேலும் அழகாக்கியது.
தலைமை ஆசிரியர் கீதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் சித்ரா, தண்டபாணி, தேவ சுந்தரி, நிர்மலா, சத்தியா, தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.