Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி. போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

 

தமிழக முதல்வர் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னையில் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து,
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காலை முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ,

60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று துவங்கியது.

இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 1400 மாநகர போலீசாருக்கு கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் துவங்கியது.

இதனை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து கூறுகையில்:
திருச்சி மாநகர காவல் துறையில் 97 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என கூறினார்.

இம்மருத்துவ முகாமில் டாக்டர் ஹாக்கிம், துணை கமிஷனர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.