பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற கணவன் மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கி உள்ளார்,
உடன் இன்ஜினியர் அங்கித் சிங் என நான்கு பேருடன் பெங்களுரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர், ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்த போது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணியளவில் தரை இறங்கியது.
முன்னதாக, கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் வானில் இருந்து தாழ்வான பகுதியில் பறந்து சென்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து உள்ளனர்,
அதனை தொடர்ந்து பெங்களூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணவன் மனைவியுடன் வந்த ஹெலிகாப்டர் அத்தியூர் என்ற இடத்தில் தரை இறங்கியது.
ஹெலிகாப்டர் தரை இறங்கியதை அறிந்த கடம்பூர் மலைப்பகுதியை பொதுமக்கள் ஹெலிகாப்டரை காண திரண்டனர், மேலும் சிறுவர்கள், இளைஞர்கள் ஹெலிகாப்டரை முன்பு நின்று ஆச்சரியத்தில் போட்டோ மற்றும் செல்பி எடுத்து கொண்டனர்.
பனிமூட்டம் காரணமாக கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியது,
இதனை தொடர்ந்து பனிமூட்டம் விலகியதை அடுத்து மதியம் 1.30 மணியளவில் சிகிச்சைக்காக வந்த கணவன் மனைவியுடன் தனியார் ஹெலிகாப்டர் கொச்சின் நோக்கி புறப்பட்டு சென்றது.
கடம்பூர் அருகே எதிர்பாராது ஹெலிகாப்டர் தரை இறங்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.