தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை துவக்கம்.
கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை துவக்கம் மற்றும் பதிவு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கும் கூட்டம் தமிழ்நாடு வங்கி ஊழியர் மாநில பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையிலும், திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் பேரவை தலைவர் சின்னசாமி முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில்,
கூட்டுறவு வங்கிகளில் பற்றாளர் குழு அமைக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டுக்குரிய ஊதிய உயர்வு குழுவை சம்பள சீரமைப்பு குழுவாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்
.3 ஆண்டுகளுக்கு பணி மாறுதல் அரசானையை முறையாக செயல்படுத்திட வேண்டும், மேலும் நகர, மாநில, மத்திய நகர கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி என பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு கூட்டுறவு வங்கி பணியாளர்களை கிரிமினல் குற்ற வழக்கில் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள உயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பேரவை பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்க்க, முடிவில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவை பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார்.