பணி நிரந்தரம் செய்ய வேண்டி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் தீர்மானம்.
தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் (இணைப்பு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம்) மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ரங்கநாதன் தலைமையிலும்
,பொதுச் செயலாளர் சரவணகுமார், அமைப்பு செயலாளர் தினேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மாநில தலைவர் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியிடப்பட வேண்டும், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கூறும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்ட பிறகும் கால தாமதம் ஆவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
எனவே அவற்றை உடனடியாக பரிசீலித்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும், சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.