திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் பாரில் (டாஸ்மாக் எண் 10522)
24 மணி நேரமும் மது விற்பனை கன ஜோராக நடைபெற்று வருகிறது.
இந்த பார் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது.
இதனால் இந்த டாஸ்மாக் பாரின் முன்பு எப்போதும் குடிமகன்கள் நின்று குடித்து கொண்டும் சிலர் போதையில் பாரின் எதிரில் ரோட்டில் படுத்தும் உள்ளனர்.மத்திய பேருந்து நிலையம் அருகே இந்த அவலநிலை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட பார் அசோசியேஷன் பொருளாளரும் இந்த டாஸ்மாக் பாரின் உரிமையாளருமான கரிகாலனிடம்
(இவருக்கு திருச்சியில் மட்டும் 6 பார்கள் உள்ளது) கேட்டபோது தினம் ரோந்து போலிசாருக்கு 200 ரூபாயும் , மாதந்தோறும் காவல்துறைக்கு மாமுலும் தருகிறோம்,டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மாமுல் தருகிறோம் நீங்கள் என்ன என்னிடம் கேள்வி கேட்பது என திமிராக பேசுகிறார்.
இவருக்கு உடந்தையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனைத்து டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் இருந்து மாத மாமுல் வாங்கி தரும் பார் அசோசியேஷன் தலைவர் மார்க்கெட் மகாலிங்கம் துணையாக உள்ளார் என்ற தைரியத்தில் இவர் இவ்வாறாக பேசுகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையில் இவர்களுக்கெல்லாம் உடந்தையாக இருப்பாரோ என்ற எண்ணத்தில் டாஸ்மாக் உயர் அதிகாரிகள்,
காவல்துறையினர்
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர்.
திருச்சி முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் பார்களில் முறைகேடான முறையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அரசு டாஸ்மாக் பாரில் விற்பனை கனஜோராக இருக்கும்.
எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு .