திருச்சி இந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.
RTI 2005 -ஐ அலட்சியம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை.
திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி ஆணையர் அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமை எழுத்தர் அவர்களிடத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தால் விண்ணப்பத்தின் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்தது கிடையாது.
அதுமட்டுமல்லாது திருக்கோவில் சம்பந்தப்பட்ட மனுக்களை பொதுமக்கள் அனுப்பினாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.
உதவி ஆணையர் அலுவலகம் எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும். அந்தப் பரபரப்புக்கு காரணம் உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில் பணியாளரிடம் அங்கு பணி புரிகின்றவர்கள் பேரம் பேசுவதற்கே நேரம் சரியாக உள்ளது.
எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்படும் அலுவலகம் உதவி ஆணையர் அலுவலகம் என கூறலாம்.
இது பொதுமக்கள் மனு மீது மட்டும் தான் என்று நினைத்துவிடாதீர்கள்,
நல்ல நோக்கத்திற்காக மத்திய அரசு , தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, கொண்டு வந்தது. அந்த சட்டத்தினால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் ஊழல் முறைகேடுகள் பல வெளிச்சத்திற்கு வருவதற்கு இந்த சட்டம் பயனுள்ள சட்டமாக அமைந்துள்ளது.
பரம ஏழை மக்கள் தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி இழந்த உரிமைகளை மீட்பதற்கு உதவியாகவும் இந்த சட்டம் அமைந்துள்ளது.
ஆனால் திருச்சி இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 ஒரு கேலிக்கூத்து சட்டமாகவே நடத்தப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 திருச்சி, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு வரப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு செய்தால். விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காத அவல நிலை வெளிச்சத்திற்கு வரும் மற்றும் பொதுமக்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் புகார்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் படி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தகவல் கொடுப்பதில்லை. அதே போல் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுடன் மனுதாரர்களுக்கு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவித்தது கிடையாது.
நாங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆய்வு செய்தால் உண்மை நிலை தெரியவரும்.
எங்களுடைய குற்றச்சாட்டிற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளது.
திருச்சி உதவி ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில் பணியாளர்களிடம் அவர்களுக்கு தேவையான அலுவல் பணி சார்ந்த காரியங்களுக்கு பேரம் பேசுவதற்கு தான் நேரம் உள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள திருக்கோவில் பணியாளர்கள் பலர் அலுவலகம் முன் நின்றுகொண்டு உதவி ஆணையர் அலுவலகத்தில் அரங்கேறும் கூத்துக்கள் குறித்த நிகழ்வுகள்களும் நடைபெற்று வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி உதவி ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் சென்று தகவல் கேட்டால் முறையான பதில் ஏதும் தெரிவிப்பது கிடையாது.
இப்படி அலட்சியப் போக்குடன் செயல்படும் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகின்ற அலுவல் பணி குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆய்வு செய்தால் உண்மையில் பல செய்திகள் வெளிச்சத்துக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
நடைபெற்றுவரும் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யவில்லை என்றால் எங்கள் இயக்கத்தின் சார்பில் பொதுமக்களை திரட்டி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 மனுகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களும் கிடப்பில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும்,
வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.