மிரட்டல் விடுக்கும் ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்பியிடம் புகார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று புகார் மனு அளித்தனர்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
எங்களது பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை என்ற விலாசத்தில் துணை பொது செயலாளராக செயல்பட்டு வரும் கள்ளக்குடி காமராஜ். அவரது மகன் பிரேம் காமராஜ். இவர்கள் மீது ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த திருச்சி சோபனாபுரம் ஆனந்த் (த/பெ). சுகுமார் கடந்த 26.12.2021ம் ஆண்டு காமராஜ்க்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். உன்னையும் உன் மகன் பிரேமையும் சத்தமில்லாமல் அடித்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும் 02.01.2022 அன்று மதுரையை சேர்ந்த பி.ஆர். ஜல்லிக்கட்டு பேரவையில் பயணிக்கும் மேலும் ஒருவரான மதன் என்பவர் பிரேம் காமராஜிற்கு போன் செய்து என் மீது
ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. எதை பற்றியும் கவலைப்பட மாட்டேன். எங்களது ஜல்லிக்கட்டு பேரவை எங்களது இஷ்டபடி தான் செயல்படும். அது பற்றி கேள்வி கேட்டாலோ அல்லது கணக்கு வழக்கு கேட்டாலோ உன்னையும், உன் அப்பனையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனவே எஸ்பி அவர்கள் மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடி்கை எடுக்குமாறு தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக கேட்டுக்கொண்டுள்ளனர்.