தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் எகிறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
தமிழகத்தில் மேலும் 4,862- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,481-பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,577-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 668- பேர் குணம் அடைந்துள்ளனர்.