இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பினால்
நடப்பு 2021-22 பருவத்திற்கான ரஞ்சி கோப்பை, சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய கிரிக்கெட் போட்டிகளை ஒத்தி வைப்பது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது.