Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி இமிகிரேஷன் அதிகாரி மீது உயர் அலுவலர்களுக்கு விமான பயணி புகார்.

0

திருச்சி விமான நிலைய குடியேற்றப்பிரிவு
அலுவலர் மீது, உயர் அலுவலர்களுக்கு, விமான நிலைய இயக்குனருக்கும் விமான பயணி புகார்.

திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் அலுவலர் மீது உயர் அலுவலர்களுக்கு புகார்கள் அனுப்பப் பட்டுள்ளது. நிலைய இயக்குநருக்கும் பயணி ஒருவர் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சம்பவங்கள் விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு (இமிகிரேஷன்) தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக
ஐ.பி எனப்படும் உளவுத்துறை போலீஸாரின் கட்டுப்பாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது.

என்றாலும், உயர் அலுவலர்களாக ஐ பி பிரிவினர் பணியாற்றிய நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில், தமிழக காவல்துறையில் கடந்த பல ஆண்டுகளாக குடியேற்றப்பிரிவில் பணியாற்றிய நபர்கள் சிலரைக் கொண்டும் குடியேற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

திருச்சி விமான நிலையத்திலும் இதே நிலைதான் உள்ளது. குடியேற்றப்பிரிவு உயர் அலுவலர் மற்றும் ஐ.பி.பிரிவைச் சேர்ந்தவர்கள் பணியாற்றினாலும், ஏற்கெனவே பணியாற்றிய போலீஸார் மற்றும் பல்வேறு மத்திய காவல்துறை துணைராணுவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் ஓ டி யாக பணியாற்றியும் வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வடமாநிலத்தை (ம.பிரதேசம்) சேர்ந்த கபில் சுக்லா உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் மீது பல்வேறு முறைகேட்டு புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து குடியேற்றப்பிரிவு உயர் அலுவலர்கள் மற்றும் திருச்சி விமான நிலைய இயக்குநர் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள புகார்களில் கூறப்பட்டிருப்பது…

தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் சொந்த ஊர் என்பதற்காக வேண்டுமானால் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், வட மாநிலத்தைச் சேர்ந்த அவர் திருச்சியில் இத்தனை ஆண்டுகள் பணியாற்றி வருவது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவர் டிராவெல் ஏஜென்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு, இசிஆர் பாஸ்போர்ட்டில் செல்வோருக்கு உதவுவதாகவும், மேலும் முறைகேடு ஆவணங்களில் செல்வோருக்கும் உதவி , அதன்மூலம் முறைகேடுடாக வருவாய் ஈட்டி,

திருச்சி கே கே நகர், சுந்தர் நகப் பகுதிகளில் இடங்கள் வாங்கியுள்ளார்.

மேலும் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஐ பி யில் பணியாற்றும் உயரதிகாரிகளின் பெயர்களை கூறியும், தமிழகத்தை, திருச்சியைச் சேர்ந்த பணியாளர்களை பணியிட மாற்றம் செய்வதாகவும் கூறி வருகிறார். பல நல்ல அலுவலர்கள் குடியேற்றப்பிரிவிலிருந்து வேறு பிரிவுக்கும், பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர் மட்டும் மாறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நபர்களை பயன்படுத்தி வெளி நாடுகளிலிருந்து சமூக விரோதிகள் கூட பயணிகள் போர்வையில் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு மிகுந்த இத்துறையில் இதுபோன்ற நபர்களுக்கு இடம் தராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு கடிதத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயணி ஒருவர்,
இசிஆர் வகை பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல வந்திருந்தபோது, குடியேற்றப்பிரிவு அலுவலர் ரூ. 20,000 கொடுத்தால்தான் துபாய் செல்ல முடியும் என்றார்.
நான் பயணத்தை ரத்து செய்துவிட்டேன் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருச்சி விமான நிலைய இயக்குநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.