Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம் என புத்தாண்டு உறுதிமொழி எடுத்து கொண்டாட மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் வேண்டுகோள் .

0

கே.சி.நீலமேகம் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்து களுடன் , உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.

2022 முதல் நாமும், நம் குடும்பத்தாரும், பாலிதீன் பைகளில் பொருள் வாங்குவதை நிறுத்தலாமே? பயன்படுத்துவதை நிறுத்தலாமே?

நாம் விட்டுச்செல்லும் உலகம் நஞ்சாகிவிடாமல் , வரும் சந்ததியும் வாழவேண்டுமல்லவா?

நமது இளமைக்காலம்,
எவ்வளவு இனிமையானது…
இயல்பானது…..
நமது முன்னோர்களை வாழ்த்தி வணங்குவோம்…

பாலிதீன் பைகளை ஒவ்வொரு தனி நபரும் எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என சிந்தித்து, சிறு முயற்சியை துவங்குவோம்.

காய்கறி, மளிகை பொருள்கள், பழங்கள் வாங்க செல்லும் போது துணி பைகளை கொண்டு செல்லுங்கள்

மீன் , இறைச்சி, டீ, காபி, பழச்சாறு, வாங்க செல்லும் போது ஒரு பாத்திரத்தை கொண்டு செல்லுங்கள்.

நீங்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு பொருளை வாங்க நேரிடலாம் அப்போ வேறு வழி இல்லாமல் பாலிதீன் பைகளில் பொருளை வாங்க நேரிடும் அதை தவிர்க்க எப்பொழுதுமே உங்கள் வாகனத்தின் முன்பு ஒரு துணி பையை வைத்து கொள்ளுங்கள்

நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒவ்வொரு தனி நபரும் முயற்சி செய்யுங்கள் உங்களில் இருந்து மாற்றத்தை கொண்டு வாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை கொண்டு செல்லுங்கள்,

ஒரு நாளைக்கு ஒரு நபரிடமாவது இந்த நாட்டின் பசுமையை காத்திட விழிப்புணர்வு கொடுங்கள்.

வருங்கால சந்ததிகளை நலவாழ்வு வாழ வழி செய்வோம்.

2022 புத்தாண்டு முதல் பிளாஸ்டிக் கேரிபை, நானோபை பயன்படுத்த அனுமதியில்லை,
துணிபை, சணல்பை என பாரம்பரிய முறைக்கு மாறவும்

முதலில் நாம்மாறுவோம்…., துணிப்பையை எடுப்போம். 2022 முதல் வாழ்த்துகள் , மற்றும் உறுதி எடுத்துக்கொள்வோம்

என திருச்சி தண்ணீர் கே.சி. நீலமேகம்,
மாநில பொருளாளர் ,
மக்கள் சக்தி இயக்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.