திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
சின்னசாமி பிள்ளை சத்திரம் அருகே உள்ளதால் சத்திரம் பேருந்து நிலையம் என பெயர்பெற்ற
இந்தப் பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 28 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், 11 கடைகள், தாய்மாாகள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பகம், ஓய்வறை, கழிவறைகளும்,
முதல் தளத்தில் 17 கடைகள், 5 உணவகங்கள், காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று திருச்சியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார்.