Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு – பக்தர்களுக்கு இரவு நேர ஊரடங்கில் தளர்வு

0

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு – பக்தர்களுக்கு இரவு நேர ஊரடங்கில் தளர்வு

சபரிமலை ஐயப்பன் கோவில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை முதல் முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. தினசரியும் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மண்டல பூஜை காலத்தில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 85 கோடி ரூபாய் கோயிலுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருவழிப்பாதையில் அனுமதி

நாளை முதல் முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. எருமேலி கோழிக்கடவில் இருந்து காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் பகல் 12மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாபரணம் ஊர்வலம்

அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்த குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஜனவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12 ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து வரப்படும்
.
மகர ஜோதி தரிசனம்

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14ஆம் தேதியன்று நடைபெறுகிறது. பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது, 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வரவேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

இரவு ஊரடங்கு

 

கொரோனா பரவலைத் தடுக்க கேரளாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐயப்ப பக்தர்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு பொருந்தாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.