திருச்சியில்
2 இளம் பெண்கள்
மாயம்.
போலீசார் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராமநாதன் நகரைச் சேர்ந்தவர் மசனகுமார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 25). இவர் திருச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இங்கு சம்பவத்தன்று ஐயப்பன் கோயில் அருகே நடந்து சென்று உள்ளார் ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தாய் அன்னலட்சுமி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில்
திருச்சி அரியமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் மதியழகி ( வயது 28) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்துஅவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.