“சைபர் கிரைம் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” வழக்கறிஞர் சிவக்குமார் கோரிக்கை.
கடலை மிட்டாய் தொடங்கி கார், கப்பல் என எது வாங்கினாலும் ஆன்லைன் பேமன்ட். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி வெகு வேகமாக இந்தியா முன்னேறி வருகிறது.
ஆனால் இதே வேகத்தில் ஆன்லைனில் அதிகரிக்கும் குற்ற சம்பங்களும், முறைகேடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆனால் இவ்வாறு தமிழகத்தில் பெருகும் முறைகேட்டை தடுக்க மற்றும் தண்டனை வாங்கிதர சைபர் குற்ற காவல் நிலையங்கள் மாநகரம் மற்றும் மாவட்டங்கள் தோறும் ஒன்றிரண்டே உள்ளது என்பது வேதனை.
மேலும் இது சைபர் குற்றவாளிகளுக்கு மேலும் தவறுசெய்ய உந்து சக்தியாக உள்ளது என்பது கள எதார்த்தம்.
எனவே இதனை தடுக்க ஒவ்வொரு காவல் சரகங்கள் தோறும் அதாவது மூன்றிலிருந்து ஐந்து காவல் நிலையங்கள் உள்ளடக்கிய காவல் சரகங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த மகளிர் காவல் நிலையங்களுக்கு தனி காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஏற்படுத்தப்பட்டது போல
தமிழகத்தில் அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க தமிழக முதல்வரும், தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களும் தனிகவனம் செலுத்தி காவல் சரகங்கள் தோறும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது போல காவல் சரகங்கள் தோறும் சைபர் குற்றத்தடுப்பு காவல் நிலையங்களை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு தமிழகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சைபர் குற்ற சம்பவங்கள் குறைவதுடன் தொடர்ந்து பொதுமக்களின் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துகொள்கிறேன்.
என திருச்சி மாவட்ட மக்கள் நீதி மய்ய பொருளாளர் கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.