திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி திருச்சியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
3 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு.
பெட்ரோல், டீசல், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும். அம்மா மினி கிளினிக்குகள் மூடுவதை நிறுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,
திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு ,திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜங்ஷன் வழிவிடுவேல் முருகன் கோவில் அருகில் இன்று நடந்தது.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார். புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி , முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி கே.கே. பாலசுப்பிரமணியன், அண்ணாவி, பூனாட்சி, சிவபதி, மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னச்சாமி, பிரிண்ஸ் தங்கவேல், இந்திராகாந்தி, திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் வக்கீல்ல் ராஜ்குமார், பத்மநாதன், ஜாக்குலின், வனிதா, முத்துக்குமார், பூபதி, அன்பழகன் , முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, நாகநாதர் பாண்டி, என்ஜினீயர் சிவசங்கர ராஜவேலு என்கிற ராஜா,வக்கீல் சுரேஷ், வசந்தம் செல்வமணி, வசந்தகுமார், அப்பாக்குட்டி, ஜவகர், வண்ணார்பேட்டை ராஜன் , பால்ராஜ்,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், அறிவழகன் விஜய், பேரூர் கண்ணதாசன், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ் ,அழகேசன், அழகாபுரி செல்வராஜ், பிரகாஷ் ,
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இராவணன், எஸ்.பி. பாண்டியன் , கும்பக்குடி கோவிந்தராஜ், சாந்தி, தெய்வ மணிகண்டன், பாஸ்கர், பாலசுப்பிரமணியன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.