Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மாநில அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா.

0

'- Advertisement -

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டில் பதக்கம் பெற்றவர்களுக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.

Ad banner

திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ தலைமையில் , தடகள சங்க பொருளாளர் சி.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், பயிற்சியாளர் பிரான்ஸ் சகாயராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில்
166 புள்ளிகளுடன் 8 தங்கம், 11 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் ஜுனியர் தடகள வீரர்கள் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது.

பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஆப்பிள் மில்லட் உரிமையாளர் வீரசக்தி,
நீயூரோ ஒன் மருத்துவமனை இயக்குனர் விஜயகுமார் ,

திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கே. பிரபு , ஆகியோர் கலந்துக் கொண்டு தடகள வீரர், வீராகனைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள் .

விழாவிற்கு
சரவணன் , லாசர், லெட்சுமணன், கணேசன், ஆரிப், மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.