சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்களுக்கு செல்ல அனுமதி.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் உள்ள மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக நீரோடைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கார்த்திகை மாத பௌர்ணமியை ஒட்டி சதுரகிரி மலைக் கோயிலுக்குப் பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்நிலையில், சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளைமுதல் (16.12.2021) டிசம்பர் 19ஆம் தேதிவரை சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.