முசிறியில் பிறந்தவுடன் பெண் சிசு சாலையில் வீச்சு. திருச்சி மாவட்டம் முசிறியில் தண்ணீர் தேக்க தொட்டி அருகில் பிறந்து சில நாட்கள் மட்டுமே ஆன பெண் சிசுவை பையில் வைத்து மர்ம நபர் தூக்கி வீசி சென்று உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் முசிறி அரசு மருத்துவமனையில் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அபியூத் இளவரசன், மருத்துவ உதவியாளர் ஷீலா ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அக்குழந்தையை ஒப்படைத்தனர். பிறந்த பச்சிளங் குழந்தையை தூக்கி வீசி சென்றது பற்றி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முசிறியில் பிறந்தவுடன் பெண் சிசு சாலையில் வீச்சு.
திருச்சி மாவட்டம் முசிறியில் தண்ணீர் தேக்க தொட்டி அருகில் பிறந்து சில நாட்கள் மட்டுமே ஆன பெண் சிசுவை பையில் வைத்து மர்ம நபர் தூக்கி வீசி சென்று உள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் முசிறி அரசு மருத்துவமனையில் தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அபியூத் இளவரசன், மருத்துவ உதவியாளர் ஷீலா ஆகியோர் முதலுதவி சிகிச்சை அளித்து திருச்சி அரசு மருத்துவமனையில் அக்குழந்தையை ஒப்படைத்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் 28 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும்.
பிறந்த பச்சிளங் பெண் குழந்தையை தூக்கி வீசி சென்றது பற்றி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.