ஜமால் முகமது கல்லூரி அணி தொடர்ந்து 6வது ஆண்டாக பாரதிதாசன் பல்கலைக்கழக கபாடி சாம்பியன் பட்டத்தை வென்றது
கல்லூரிகளுக்கு இடையிலான கபாடி
போட்டியில் திருச்சி ஜமால் கல்லூரி வெற்றி.
திருச்சியில் நடைபெற்ற, கல்லூரிகளுக்கு இடையிலான கபாடிபோட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்லதிற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான கபாடி போட்டி (ஆடவர்) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இதில், திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல், தஞ்சை மண்டலத்திலிருந்து புதுகை மாமன்னர், மயிலாடுதுறை ஏ.வி.சி ஆகிய நான்கு கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன.
இதில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 61-26 என்ற புள்ளிகள் கணக்கிலும்,, புதுகை, மாமன்னர் கல்லூரியை 53-09 என்ற புள்ளிகள் கணக்கிலும், மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரியை 37-08 என்ற புள்ளிகள் கணக்கிலும் மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடம் பிடித்து,
தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக, பாரதிதாசன் பல்கலைக்கழக சாம்பியனாக திகழ்ந்தது.
கரூர், கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுகை, மாமன்னர் கல்லூரியை என்ற 43-29 புள்ளிகள் கணக்கிலும், மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரியை 37-33 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாம் இடம் பிடித்தது. புதுகை, மாமன்னர் கல்லூரி மயிலாடுதுறை, ஏ.வி.சி. கல்லூரியை 44-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.
கபாடி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஜமால் முகமது கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜீமுதீன், துணை செயலாளர், கே. அப்துஸ் சமத், முதல்வர், எஸ். இஸ்மாயில் மொஹைதீன், உறுப்பினர் மற்றும் கெüரவ இயக்குனர் கே.என். அப்துல் காதர் நிஹால், உடற்கல்வி இயக்குனர் பி.எஸ். ஷா இன் ஷா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வி துறை தலைவர், மற்றும் விளையாட்டு போட்டி செயலாளர் ஆர். காளிதாசன் ஆகியோர் பாராட்டினார்கள்.