Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நர்சிங் முடித்த இளம்பெண் மீட்பு உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள்….

0

'- Advertisement -

1.
திருச்சி பாலக்கரையில்
கத்திமுனையில் வியாபாரியிடம் பணம் பறித்தவர் கைது.

திருச்சி பாலக்கரை படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). வியாபாரி. இவர் கீழப்புதூர் மெயின்ரோட்டில் ஒரு டிபன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஓர் நபர் கத்திமுனையில் இவரை மிரட்டி பணத்தை பறித்து விட்டு தப்பி விட்டார். இதுகுறித்து மணிகண்டன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிந்து, இதுதொடர்பாக பாலக்கரை ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த இயேசுதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

2.
ஸ்ரீரங்கம் மேலூர்
கொள்ளிடம் ஆற்றில் வாலிபர் உடல் மீட்பு.

திருச்சி மாவட்டம் தொட்டியம் சீலை பிள்ளையார் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வளன். இவரது மகன் சின்னையன். (வயது 31) இவர் கடந்த 2ஆம் தேதி தற்கொலை செய்வதற்காக மாயனூர் அணைக்கட்டு பகுதியில் குதித்து நீரில் மூழ்கினார். இவரது உடலை தீயணைப்பு துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்ட உடல் திருவரங்கம் மேலூர் கொள்ளிடம் ஆற்று பகுதியில் மிதந்தது. அதை தீயணைப்பு துறையினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3.
திருச்சி தென்னூரில்
அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டவர் சாவு.

திருச்சி தென்னூர் இதாயத்நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா. (வயது 51). குடிப்பழக்கம் உடையவர். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்தும் அதிக அளவில் மது குடித்துள்ளார். இந்நிலையில் போதையில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உட்கொண்டார். இதனால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சையது முஸ்தபா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் அசாருதீன் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில்
அடையாளம் தெரியாத ஆண் பிணம் .

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அங்கு டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து பணியில் இருந்த உதவி டாக்டர் தினேஷ் என்பவர் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5.
திருச்சி புத்தூரில்
மாயமான நர்சிங் முடித்த இளம்பெண் மீட்பு.

திருச்சி புத்தூர் எட்டு பேட்டை பங்களா பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் சவுந்தர்யா (வயது 27) நர்சிங் படித்து முடித்துள்ளார். இவருக்கு வீட்டில் பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். ஆனால் திருமணத்தில் சௌந்தர்யாவுக்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி இரு சக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்திலையில் சௌந்தர்யாவை போலீசார் மீட்டனர்.விசாரணைக்குப் பின்னர் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.