தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் நடைப்பெற்றது.
இந்த கூட்டம் மாநில தலைவர் நாகை செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன், இணைச் செயலாளர் சுப்பிரமணியன், சுரேஷ்குமார், தினேஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட தலைவர் தாசன் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் சத்தியமூர்த்தி தீர்மான அறிக்கையை வாசித்தார்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட 4 தீர்மானங்கள் ஒர் மனதாக நிறைவேற்றப்பட்டன:
1. கொரோனா தடுப்பு பணியில் தொகுப்பூதியதித்தில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரியதில் பணியிடம் நிரப்பும் போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்த அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது,
சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் நிலை 2 சுகாதார ஆய்வாளர்கள் அனைவருக்கும் நிலை 1 சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 மற்றும் சுகாதார ஆய்வாளர் நிலை 2 வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
முடிவில் துணைத்தலைவர் சீராஜீதீன் நன்றி கூறினார்.