Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதித்தவர் எண்ணிக்கை 21 ஐ தொட்டது.

0

'- Advertisement -

உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

இதில், கர்நாடகாவில் 2, மகாராஷ்டிராவில் 8, குஜராத் மற்றும் டெல்லியில் தலா 1 என 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பியபிறகு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, நாகவுர் மாவட்டம் ரோஷிசா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா பல நாடுகளை ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ள பட்டியலில் சேர்த்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.