மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் அன்னதானம்,
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழியின் பிறந்தநாளை முன்னிட்டு
திருச்சி திமுக தெற்கு மாவட்ட பகுதிகளில் இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஒரு நிகழ்ச்சியாக திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் திமுக தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பாக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் ஏற்பாட்டின் பேரில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி பிரியாணி அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ரமேஷ்,
வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், பூபாலன், முருகேசன் சுமதி,கமலா, ராஜலட்சுமி, ஜெயசித்ரா, சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.