உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்றான்டார்கோயில் இளைஞரணி சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சி.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், குன்றான்டார்கோவில் மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில், தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமை வகித்தார்.

பிறந்தநாளையொட்டி நாஞ்சூர் ஊராட்சியில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
சவேரியார்பட்டிணத்தில் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டன.
மேலும், கீரனுார் அன்னை தெரசா மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது.
இதில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சு.சண்முகம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அசோக்பாண்டியன், குன்றாண்டார் கோயில் ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட கவுன்சிலர் செல்வம், நாஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி, தி.மு.க., ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ஆரோக்கியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.