Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கூட்டுறவு பண்டகசாலையில் ஊழல் முறைகேடு. வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி.

0

'- Advertisement -

கூட்டுறவு பண்டகசாலையில் ஊழல் முறைகேடு.

லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுக்குமா?.

திருச்சி, மெயின்கார்டு கேட், சிங்காரத்தோப்பு, பழைய கூட்ஷெட் ரோடு,( கோட்டை இரயில் நிலையம் செல்லும் வழி) அமராவதி மொத்த கூட்டுறவு பண்டக சாலை, தலைமை அலுவலகம் மற்றும் அங்காடி செயல்படுகிறது.

அமராவதி மொத்த பண்டகசாலை சார்பில் மாவட்டம் முழுவதும் சுமார் 100 ரேஷன் கடைகள் மற்றும் 6 மண்ணெண்ணெய் பங்குகளும் , பண்டகசாலை மைய அலுவலகத்தில் பெட்ரோல், டீசல் பங்கும் செயல்பட்டு வருகிறது.

அமராவதி மொத்த பண்டகசாலை மைய அலுவலகத்தில் இயங்கும் மண்ணெண்ணெய் பங்க் அங்காடியில் ஊழல் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மண்ணெண்ணெய் பங்க் அங்காடியில் பணிபுரிகின்ற விற்பனையாளர் சதீஷ், அமராவதி மொத்த கூட்டுறவு பண்டக சாலை அலுவலகத்தில் கணக்குப் பிரிவு அலுவலர் (AO) வேலுமணி மற்றும் உயர் அலுவலர்கள் கூட்டாக பல்வேறு ஊழல் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஊழலில் சிலவற்றை உங்கள் முன் பதிவிட விரும்புகின்றேன்.

அமராவதி பண்டகசாலை மைய அலுவலகத்தில் இயங்கி வரும் மண்ணெண்ணெய் அங்காடியில் கடந்த 20. 11 .2021 ஆம் தேதி அங்காடி விற்பனையாளர் சதீஸ் மண்ணெண்ணெய் விற்பனை செய்துள்ளதாக ரசீது போட்டுள்ளார். அந்த ரசீது எண்: PDS , 010212350007 இந்த ரசீது குடும்ப அட்டை தாரர்க்கு மண்ணெண்ணெய் பெறுவதற்காக திருச்சி கிழக்கு வட்ட வழங்கல் அலுவலர் ஒதுக்கீடு செய்த இடம், திருச்சி சந்து கடை, பகுதியில் அரசால் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற விநியோகஸ்தர் . லட்சுமி நரசிம்மன் என்ற விநியோகஸ்தர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் மேற்கண்ட ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப அட்டை தாரர் அரசு உத்தரவு படி மண்ணெண்ணெய் விற்பனை உரிமம் பெற்ற விநியோகஸ்தர்களிட ம் மண்ணெண்ணெய் பெற்று வந்துள்ளார்.

அரசு உரிமம் பெற்ற விநியோகஸ்தர் கட்டுப்பாட்டிலுள்ள குடும்ப அட்டைக்கு அமராவதி மைய அலுவலகத்தில் இயங்கும் மண்ணெண்ணெய் அங்காடியில் மண்ணெண்ணெய் வாங்கியது போல் ரசீது போடப்பட்டு போலி ஆவணங்கள் அடிப்படையில் மண்ணெண்ணையை கள்ள மார்க்கெட்டில் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறார்கள் .

பண்டகசாலையில் போலி ரசீது மூலம் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் அமராவதி பண்டகசாலை அங்காடிகள் இயங்கி வருகிறது. மணப்பாறை நகரப்பகுதியில் இயங்கி வரும் பண்டகசாலை அங்காடியில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் தீபா என்பவர் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.

பண்டகசாலை அங்காடி விற்பனையாளர் தீபா என்பவர் அலுவலகத்திற்கு சொகுசு காரில் வருவதாக ஊரெங்கும் பேச்சு.

விற்பனையாளர், தீபா அவர்களின் கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் பண்டகசாலை மைய அலுவலக கணக்கு அதிகாரி ஊழல் மன்னன் வேலுமணி, அங்கு பணி புரியும் அலுவலர்கள் கூட்டாக இணைந்து. காலாவதியான கட்டுபாடற்ற பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து. கொள்முதல் செய்ததற்கான போலி ஆவணங்கள் தயாரித்து ஊழல் மோசடிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

பண்டகசாலை சார்பில் கொள்முதல் செய்வதற்கு அரசு சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துக் கொடுத்துள்ளது. அரசின் வழிமுறைகளை பின்பற்றாமல் சில கட்டுபாடற்ற பொருட்கள் கிடைக்கவில்லை என்ற பொய்யான தகவல் கொண்டு வெளிச்சந்தையில் குறிப்பிட்ட சிலரிடம் காலாவதியான பொருள்களை குறைந்த விலைக்கு பேரம் பேசி விட்டு கொள்முதல் செய்வது தொடர் வாடிக்கையாக செய்து வருகிறார்கள். காலாவதியான பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து விட்டு போலி ரசீது மூலம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட கால அளவு கொண்ட பொருட்களைப் போல் ஆவணங்களை தயார் செய்து பொருட்களை பெற்று அமராவதி கூட்டுறவு மொத்த பண்டக சாலையில் உள்ள அனைத்து அங்காடி களுக்கும் காலாவதியான பொருட்களை அனுப்பிவைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்காடி மூலம் விற்பனை செய்து வருகின்றார்கள்.

குறிப்பாக மணப்பாறை வட்டத்தில் அமராவதி அங்காடிகளில் விற்பனை செய்யப்படும். சோப்பு, இதர பொருட்களை ஆய்வு செய்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் கட்டுப்பாடற்ற பொருள்களை வெளிச்சந்தையில் வாங்கப்பட்ட அதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்தால் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் அமராவதி கூட்டுறவு மொத்த பண்டக சாலை மைய அலுவலத்தில் பணிபுரிகின்ற பணியாளர்களின் கைபேசி மற்றும் அலுவலக தொலைபேசிகளை ஆய்வு செய்தால் நடைபெற்றுவரும் ஊழல் முறைகேடுகளுக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

திருச்சி அமராவதி மொத்த பண்டகசாலை சார்பில் தீபாவளி திருநாள் முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்காக கொள்முதல் செய்யப்பட்டது குறித்து முழுமையாக ஆய்வு செய்தால் அதில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளும் தெரியவரும் மேலும் வெளிச்சந்தையில் பண்டகசாலை சார்பில் வாங்கப்பட்ட கொள்முதல் பொருள்களையும் , அதன் ரசீதையும், பண்டகசாலை சார்பில் வழங்கப்பட்ட தொகையையும் முழுமையாக ஆய்வு செய்தால் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வரும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக ஊழல் மோசடியின் ஈடுபட்டுவரும் நபர்களை கண்டறிந்து. ஊழல் முறைகேடுகள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை ஊழல்வாதிகள் இடத்திலிருந்து பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்த்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அலுவலர் மீது கடுமையான சட்டப்படி நடவடிக்கை எடுத்தா ல் அழிந்து வரும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு பண்டகசாலை அங்காடிகளை அழிவிலிருந்து மீட்டு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதற்கு இந்த ஊழல் முறைகேடுகள் குறித்த நடவடிக்கையினால் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு பண்டகசாலை அங்காடிகள் இன்னும் பல உருவாவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த நடவடிக்கை அமையும் என்பதை கேட்டுக் கொள்வதுடன்.
நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவண்:
மகேஸ்வரி வையாபுரி ,
வழக்கறிஞர்/ பொதுச் செயலாளர்,,
உபயோகிப்பாளர் உரிமை இயக்கம்.
திருச்சி:
செல்:
95002 99882

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.