திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவகத்தில்
முரசொலிமாறனின் 18 வது நினைவு நாளை முன்னிட்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி , மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,
மாவட்ட துனை செயலாளர் விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய்,மோகன்தாஸ், இளங்கோ,ராம்குமார்,
ஒன்றிய செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல், சேர்மன் துரைராஜ்,டோல்கேட் சுப்ரமணி
மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.