நடுரோட்டில் பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபர் கைது –
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முத்து செட்டித்தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் மேல அம்பிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில நடந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர் திடீரென அவரின் வாயை கையால் மூடி கட்டிப்பிடித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூக்குரல் இட்டார் முத்துலட்சுமி.

இதையடுத்து கட்டிப்பிடித்த அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இது சம்பவம் குறித்து பொன்மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து மேல அம்பிகாபுரம் முனீஸ்வரன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் ( வயது 29) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.