மேலப்புதூர் ரயில்வே பாலத்தில் வீணாகும் குடிநீர். நடவேடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம். காந்தி மார்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் கமலக்கண்ணன்.
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே. கமலக்கண்ணன்
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருச்சி
மாவட்ட
மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மேலப்புதூர் சுரங்கப்பாதையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதை சரி செய்வது தொடர்பாக ….
மேலப்புதூர் சப்வே ரயில்வே சுரங்க பாலம் பாலத்தில் குடிநீர் குழாய் போல தண்ணீர் வருகிறது.
திருச்சியில் முக்கிய பாலத்தில் ஒன்று மேலப்புதூர் ரயில்வே சுரங்க பாலம்,
தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பாலம் … மழை பெய்தால் அந்த சுரங்க பாலத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்…….
இது ஒருபுறமிருக்க மழை விட்டாலும் தொடர்ந்து பாலத்தில் குடிநீர் குழாய் போல தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள் ஆகிறார்கள்….
உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன் அந்தப் பாலத்தை உடனே சரி செய்ய வேண்டுகிறோம்.
தினசரி அந்தப் பாலத்தை கடந்து எத்தனை எத்தனை அதிகாரிகள்…. எத்தனை ஆளும்..எதிர்..கட்சியை சேர்த்த அரசியல்வாதிகள் செல்கிறார்கள்.
இந்த ஒரு அவலநிலை யார் கண்ணிலும் படவில்லையா???படவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த படங்களை பார்த்து உடனே சரி செய்ய வேண்டும் ….
மேலும் தாங்கள் அலட்சியம் காட்டுவீர்கள் என்றால் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் அப்பகுதியிலுள்ள உள்ள வியாபாரிகளையும்…வியாபாரிகள் சங்கங்களையும் ஒருங்கிணைத்து சப்வேயில் அமர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் …
என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்னன் தனது மனுவில் கூறியுள்ளார்.