உணவகக்கல்வி மற்றும் விருந்தோம்பல் துறையில் 50 ஆண்டுகள் கொண்டாடும், தண்ணீர் அமைப்பின் தலைவர் எம்.பொன்னிளங்கோ அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு டி.சண்முகசுந்தரம் தலைமையிலும், மோகன் குமார் முன்னிலையில் நடந்தது.
கபிலன் வந்தவர்களை வரவேற்றார்.
விழாவிற்கு கலாவதி சண்முகம், உதயகுமார், தண்ணீர் அமைப்பின் செயலர் கி.சதீஸ்குமார் , ஏ.செல்வம், வாழ்த்துரையாற்றினார்கள் . மேலும்
நகைசுவை மன்ற செயலாளரும், தண்ணீர் அமைப்பின் பொருளாளருமான சிவகுருநாதன் ஒருங்கிணைத்து, நிகழ்வை தொகுத்து வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமையல் செப் டாக்டர் தாமு, மற்றும் கவிஞர் நந்தலாலா பங்கேற்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.
விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் , கவிஞர் தனலெட்சுமி, அசோக் ரெத்தினக்குமார் மற்றும்
உணவகத்துறை அறிஞர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துரை வழங்கினர்கள்.
எம்.பொன்னிளங்கோ ஏற்புரையாற்றினார்.
எம்.பொன்னிளங்கோ , சாந்தா பொன்னிளங்கோ ஆகியோர்க்கு பாராட்டும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
ஆப்பிள் மில்லட் வீரசக்தி நன்றியுரையாற்றினார்.