மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சியில் பருவமழைக்கு பிறகு அதிகரிக்கும் காய்ச்சல், சளி….? வார்டுகள் தோறும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுமா…?”
சமிபத்தில் பெய்த பருவ மழை மற்றும் பண்டிகை காலம் என்பதால் திருச்சி மாநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மற்றும் மிக குறிப்பாக குழந்தைகளுக்கு காய், சளி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒன்று முதல் எட்டாவது வரையிலான குழந்தைகளுக்கும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி பருவ மழைகளின் பொழுது திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வார்டுகள் தோறும் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தி மக்களின் துயரை துடைப்பது வழக்கம்.
ஆனால் திருச்சியில் மழை ஓய்ந்து பல நாட்களிகியும் ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் மருத்துவ முகாம்களை திருச்சி மாநகராட்சி வார்டுகள் தோறும் அமைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையரை வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன்.
என வழக்கறிஞர்
எஸ்.ஆர்.
கிஷோர்குமார்,
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.