திருச்சியில் பரிதாபம்
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
போலீசார் விசாரணை.
திருச்சி ஈ.பி.ரோடு நாகநாதசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன்.
இவரது மகன் பார்த்திபன்
(வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இவர் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.