இடத்தகராறில் மோதல்:
திருவரங்கத்தில் இளம்பெண் மானபங்கம்.
4 பேர் மீது வழக்கு.
திருச்சி பெரிய செட்டி தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்.
இவரது மனைவி பூஜா. ( வயது 32). அதே பகுதியில் வசித்து வருபவர்.
இதே பகுதியில் வசித்து வரும் ரிஷிகேஷ், அஸ்வின், கிருஷ்ணமூர்த்தி| புவனேஸ்வரி. இவர்கள் 4 பேரும் சேர்ந்து இடத் தகராறில் பூஜாவை மானபங்கப்படுத்தி,
அதை செல்போனில் படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது
.இதற்கிடையில் நிலத்தகராறு தொடர்பான வழக்கு திருச்சி ஜெ.எம்.எண்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறித்து பூஜா கொடுத்த புகாரின் பெயரில்
அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.