ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
மெல்போர்ன் ரெனேகட்ஸ் மற்றும் பிரிஸ்மென் ஹீட் அணிகள் தொடரில் சிறப்பாக விளையாண்டு வருகின்றன.
10 போட்டிகளில் பங்கேற்றுள்ள மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீராங்கனைகள் ஹர்மான்ப்ரீத் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
தொடரின் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஹர்மான்ப்ரீத் 309 ரன்களுடன் முதல் இடத்திலும் ,ஜெமிமா ரோட்ரிக்ஸ் 293 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
முக்கியமாக ஹர்மான்ப்ரீத் கவுர் பந்துவீச்சிலும் ஜொலித்து வருகிறார். இந்த தொடரில் 12 விக்கெட் வீழ்த்தியுள்ள அவர் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் 4வது இடத்தில் நீடிக்கிறார்.
இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஷ் லீக்கின் இறுதி போட்டி இந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.