டி20 உலக கோப்பை.ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 39 பந்துகளில் இந்தியா அபார வெற்றி
டி20 உலக கோப்பை.ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 39 பந்துகளில் இந்தியா அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி இந்தியா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இந்திய அணியின் துல்லிய பந்து வீச்சாள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸ்காட்லந்து அணி 17.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் எடுத்தது.
இந்தியா அணி சார்பில் ஜடேஜா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை இந்திய அணி துவக்கியது.
துவக்கம் முதலே ஸ்காட்லாந்து பந்து வீச்சை இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி புரட்டியெடுத்தது. குறிப்பாக கே.எல் ராகுல் ஆட்டத்தில் அனல் பறந்தது. கே.எல் ராகுல் பேட்டில் பட்ட பந்துகள் அனைத்தும் சிக்சரும் பவுண்டரிகளுமாக பறந்தன. 6.3 ஓவர்களில் 89 ரன்கள் அடித்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. 18 பந்துகளில் கே.எல் ராகுல் அரைசதம் அடித்தார்.இது இந்திய வீரர்களில் 2-வது அதிவேக அரை சதம் ஆகும். 12 பந்துகளில் அரை சதம் அடித்த யுவராஜ் சிங் மீண்டும் முதலிடத்தில் உள்ளார்.
ஆட்ட நாயகன் விருது 4 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.