Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் தொகுதி வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களின் மனக்குமுறலை தீர்த்து வைப்பாரா அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ? மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கை.

திருவெறும்பூர் தொகுதி வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களின் மனக்குமுறலை தீர்த்து வைப்பாரா அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ? மநீம வழக்கறிஞர் கிஷோர் குமார் அறிக்கை.

0

'- Advertisement -

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாகும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

“திருச்சி திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களின் குமுறல்”

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்
திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாழவந்தான் கோட்டையில் பொது பார்வையாளராக மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் ஆகிய நான் உள்ளிட்ட மய்ய தோழர்கள் கலந்துகொண்டோம்.

அப்பொழுது மேற்படி வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் தூய்மை பணியை மேற்கொள்ள எட்டு நபர்கள் பணியாற்றி வருவதாகவும். மேற்படி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வது மட்டுமின்றி, ஊராட்சி பகுதி பொது சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய தங்களை ஊராட்சி தலைவர் வற்புறுத்துவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கையுரை, மாஸ்க் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் தங்களுக்கு வாழவந்தான் கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.

இவ்வாறு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பொது சாக்கடையில் இறங்கி பணி செய்வதால் தங்களது கை, கால் மற்றும் உடல்முழுவதும் தேமல் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக PDO உள்ளிட்ட உயர் அதிகாரிக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதிபடுத்துவதுடன்

எந்திரங்கள் செய்ய கூடிய சாக்கடை அள்ளும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடுத்து நோயினால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மக்கள் நீதி மய்யம் சார்பில் மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

என
மக்கள் நீதி மய்ய திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.