விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 8வது நாள் ஆர்ப்பாட்டத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு போராட்டம்.
விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 8வது நாள் ஆர்ப்பாட்டத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு போராட்டம்.
8-வது நாள் தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி கொண்டு விவசாயிகள் உண்ணாவிரதம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் முதலான கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் கரூர் பைபாஸ், மலர் சாலையில் இன்று 19.10.2021 காலை 8 மணிக்கு
எட்டாவது நாளாக லாபகரமான விலை வழங்காமல் சட்டையை பிடிங்கி கொண்டதால் முதல் நாள் சட்டை இல்லாமலும், அரசு வேஷ்டியையும் பிடுங்கி கொண்டதால் இரண்டாவது நாள் விவசாயிகள் கோவணம் கட்டியும், மூன்றாவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை அரசு பிச்சை எடுக்க விட்டு விட்டதால் பிச்சை எடுத்தும், நான்காவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டியதால் விவசாயிகள் மண்டை ஒட்டுடனும், ஐந்தாவது நாள் விவசாயிகளை மத்திய லாபகரமான விலை தராமல் ஏமாற்றி விட்டதால் நாமம் போட்டும், ஆறாவது நாள் விவசாயிகள் உணவில்லாமல் வயலில் ஓடும் எலியை பிடித்து தின்றும் உன்ன உணவில்லாமலும் இறந்ததால் இறந்த விவசாயிகளுக்கு பாடை கட்டியும், ஏழாவது நாள் சுதந்திர இந்தியாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க விவசாயிகளுக்கு பேச்சுரிமை இல்லாமலும், வெளியே நடமாட உரிமை இல்லாமலும் காவல் துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளதால் வாயை கட்டியும்,
இன்று எட்டாவது நாள் லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளை மோடி அரசு தூக்கில் போட்டு விட்டது என்பதற்காக தூக்கு கயிறை கழுத்தில் மாட்டி கொண்டு உண்ணாவிரதம் நடைபெற்றது.

