Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் “விஜயதசமி நாள்” கொண்டாடப்பட்டது.

அது சமயம் அக்ஷராப்யாஸம் என்று அழைக்கப்படும் “முதலெழுத்து தொடக்கப் பயிற்சி” நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இதுவரை பள்ளியில் அடியெடுத்து வைக்காத முதலாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் பழமையான முறைப்படி அலங்கரிக்கப்பட்ட ஐந்து முக குத்துவிளக்கின் முன், நெல் பரப்பி அதன்மீது மயிலிறகின் மூலமும் விரல்கள் மூலமும் தமிழ் முதல் எழுத்தை எழுத கற்றுக்கொண்டார்கள்

முன்னதாக இன்றைய தினம் “உலக கை கழுவும் தினம்” என்பதால் ஆசிரியப் பெருமக்கள் முன்னிலையில் மூத்த மாணவர்கள் வழிகாட்டுதலோடு முறையாக கை கழுவும் விதத்தை கற்றுக் கொண்டார்கள்”

மேலும் இன்று ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் என்பதால் அவரது அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மாணவ மாணவிகள் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்

விஜயதசமி விழா,
உலக கை கழுவும் தினம்,
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பெரும் தொற்று காலம் என்பதால் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்த இந்நிகழ்ச்சியைப் பெற்றோர்கள் மிகவும் பாராட்டினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.